கோடை விடுமுறைக்கு நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசமாக என்ன செய்து தரலாம் என்று நினைப்பவர்கள் இந்த முந்திரி சாக்கோ ரோல்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். முந்திரியும், சாக்லேட் சுவையும் சேர்ந்த இந்த ரோல், டேஸ்ட்டியானது மட்டுமல்ல… ஹெல்த்தியானதும்கூட.
என்ன தேவை
முந்திரி – அரை கிலோ
சர்க்கரை – கால் கிலோ
சாக்கோ சிப்ஸ் – 50 கிராம்
சாக்கோ ஸ்பிரெட் – 100 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – ஒரு கப்
கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படி செய்வது
முந்திரியை 4 – 5 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டர் (அ) மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும்.
சர்க்கரை கரைந்ததும், அதனுடன் சிறிதளவு நெய், அரைத்த முந்திரி விழுது சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
நடு நடுவே நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
இதை நெய் தடவிய தட்டு அல்லது பார்ச்மென்ட் பேப்பரில் கொட்டிப் பரப்பவும் (அதிகமாக இறுகிவிட்டால் ரோல் செய்ய வராது; ரொம்ப இளகலாகவும் இருக்கக் கூடாது).அதன் மேல் அரை இன்ச் உயரத்துக்கு சாக்கோ ஸ்பிரெட் தடவவும். பிறகு பாய் போலச் சுருட்டவும்.
இந்த நீளமான முந்திரி சாக்கோ உருளையை ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். வெளிப்புறம் கண்டென்ஸ்டு மில்க் தடவி சாக்கோ சிப்ஸ் தூவி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்
கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்
கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்