Case if entry fee is discriminately charged in Mamallapuram

மாமல்லபுரத்தில் அடாவடி வசூல்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகம்

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக நுழைவு கட்டணம் வசூலித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும்  தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடி செலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராகுல்நாத், “மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்” என்று எச்சரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்புண்டா?

கிச்சன் கீர்த்தனா: சுக்கு சூப்

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *