திருப்பரங்குன்றம் மலையேறத் தடை.. கோர்ட்டில் முறையீடு!

Published On:

| By christopher

case filed against 144 in madurai

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அமலில் உள்ள 144 தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக இன்று (பிப்ரவரி 4) விசாரணைக்கு வருகிறது. case filed against 144 in madurai

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. ’திருப்பரங்குன்றம் மலையை மீட்போம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி அழைப்பு பிற கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பிருப்பதால், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.

மேலும் மதுரை மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம், எல்லை பகுதியான விராலிமலை அடுத்துள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் செக்போஸ்ட் அமைத்து மதுரைக்குள் வரும் வாகனங்களை சோதனைக்கு பிறகே போலீஸார் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் மலை கோவில் மற்றும் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மதுரையில் அமலில் உள்ள 144 தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுந்தர வடிவேலு என்பவர் அவசர வழக்காக விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு, இன்று மாலையில் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share