விடுமுறை நாள்… உடம்புக்குச் சற்று ஓய்வளித்திருக்கும் நிலையில் என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பவர்கள் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள இந்த கேரட் – தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.
என்ன தேவை?
கேரட் – 2
கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க தேவையான அளவு
காய்ந்த மிளகாய் விதை – அரை டீஸ்பூன்
சர்க்கரை – 2-3 டீஸ்பூன்
உப்பு – அரை சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
தயிர் – அரை கப்
எப்படிச் செய்வது?
கேரட்டைத் துருவி, அதில் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சண்டே ஸ்பெஷல்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?