கோடைக்கு வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று பலருக்கும் தோன்றும். கோடையில் திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு சரியான தீர்வு இந்த கேரட் மில்க் ஷேக்… உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
என்ன தேவை?
பால் – 150 மில்லி
துருவிய கேரட் – 100 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 50 மில்லி
வெனிலா ஐஸ்க்ரீம் – 50 கிராம்
ஐஸ் க்யூப் – 5
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ் க்ரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக சுழற்றியெடுக்கவும். இதை ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: தேவைப்பட்டால், ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.