கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து சென்னைக்கு வெல்லம் ஏற்றி லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்தநிலையில் சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு திருமண விழாவுக்காக கார்த்தி, சதீஷ், சண்முகம், செந்தில் ஆகிய நான்கு பேர் வந்துள்ளார்கள்.
திருமண விழா முடிந்த பிறகு நான்கு பேரும் சென்னை நோக்கி இன்று (பிப்ரவரி 12) அதிகாலை செல்லும் போது திட்டக்குடி அருகே வெங்கானூர் என்ற பகுதியில் லாரியில் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த கார்த்திக், சண்முகம் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ், செந்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண விழாவுக்கு சென்று சென்னை திரும்பிய இருவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்
பார்டர் பரோட்டா கடையில் கெட்டுபோன சிக்கன்? – மறுக்கும் உரிமையாளர்