சென்னையில் தாறுமாறாக சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை கீழ்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 28) எல் போர்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த கார் சாலை ஓரமாக அதிவேகமாக சென்றது.
அச்சமயத்தில் அந்த பகுதியில் சாலை ஓரமாக பலர் நடந்து சென்றுகொண்டிருக்க, அதிவேகமாக சென்ற கார் ஒருவர் மீது மோதியது. அதோடு நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை தள்ளிவிட்டு, முன்பு நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி சிறிது தூரம் தள்ளி நின்றது.
இந்த சம்பவத்தின் போது கார் மோதி கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிவீசப்பட்ட அந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் பழனி என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதுபோன்று காரை ஓட்டி வந்த ஜெயக்குமாரிடம் போலீசார் விசாராணை மேற்கொண்டனர். அப்போது, “பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று மோதிவிட்டது” என்று கார் ஓட்டுநர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பிரியா