கிச்சன் கீர்த்தனா : கேப்ஸி வெஜ் ஆம்லெட்!

தமிழகம்

இன்றைய குழந்தைகளைச் சாப்பிட வைப்பது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதே சமயம் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சத்தான உணவுகளைக் கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்து உணவுகளை, குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சமர்த்தாக சாப்பிடுவார்கள். அதற்கு இந்த கேப்ஸி வெஜ் ஆம்லெட் உதவும்.

என்ன தேவை?

சிவப்பு மற்றும் பச்சை நிற குடமிளகாய் – தலா ஒன்று
கடலை மாவு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
கேரட் – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் வெங்காயம், கொத்தமல்லித்தழை போன்றவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். கேரட்டைத் துருவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய்களை வட்டமாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும்.

ஒரு பவுலில் கடலை மாவைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் விட்டு கலந்துகொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் குடமிளகாய் துண்டுகளை வைத்து, கரைத்துத் தயாராக வைத்திருக்கும் மாவை குடமிளகாய் வட்டத்துக்குள் ஊற்றவும். இதன் மீது சிறிது எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும். சுவையான கேப்ஸி வெஜ் ஆம்லெட் தயார்.

ராகி சூர்மா லட்டு!

கிரிஸ்ப்பி நூடுல்ஸ் சாலட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *