தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா

Published On:

| By Kavi

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் நிலைமையில்  இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் 86ஆவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் காவிரியில் இருந்து கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவில் தெரிவிக்க உள்ளோம்.  கர்நாடகாவிலும், தமிழகத்திலும் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை விளக்கி மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளோம்.

பிரதமரையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். டெல்லி சென்று அனைத்து எம்.பி.க்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து சென்ற அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளோம்.

மாநிலத்தில் கடுமையான மழை பற்றாக்குறை நிலவுகிறது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா

ஏ.ஆர். ரகுமான் கன்சர்ட்: செக்யூரிட்டிகள் நியமனத்தில் அலட்சியம்… ஆடியோ ஆதாரம்!

விநாயகர் ஊர்வலங்களால் என்ன பயன்?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share