Southern Railway requested to run special buses

ரயில்கள் ரத்து : சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிய தெற்கு ரயில்வே!

தமிழகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமைகளைப் போலவே 3வது வாரமாக வரும் 25ம் தேதியும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே நாளை மறுநாள் (பிப்ரவரி 25) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, கடற்கரை – அரக்கோணம் இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

அதேவேளையில்  பொதுமக்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு முற்பகல் 11.55, 12.45, மதியம் 1.25, 1.45,  1.55, 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, மதியம் 12.00,  1.00 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சிறப்பு மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும்” என்று தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முடிவுக்கு வருகிறதா ஜிமெயில்? : கூகுள் விளக்கம்!

WPL 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசிக்குமா டெல்லி கேபிடல்ஸ்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *