போர்வெல் பம்புடன் சேர்த்து போடப்பட்ட கால்வாய் : ஒப்பந்ததாரர் கைது!

Published On:

| By Kalai

வேலூரில் போர்வெல் பம்புடன் சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சத்துவாச்சாரியில் 19 ஆவது வார்டுக்குட்பட்ட விஜயராகவபுரம் 2-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி 2 தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது அங்கிருந்து போர்வெல் பம்புடன் சேர்த்து கால்வாய் போடப்பட்டு இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

alt="Canal laid along with borewell pump"

பயன்பாட்டில் இருந்த குழாயை அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாக்கிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

“சாலையில் இருந்த பம்பையும் காணோம். வீட்டுக்குள்ளே போகும் வழியையும் காணோம். மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத திமுக ஆட்சியின் அவலம்” என்று அறப்போர் இயக்கம் விமர்சித்திருந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி 2ஆவது மண்டல உதவி ஆணையர் செந்தில் குமரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது செய்யப்பட்டார்.

வேலூரில் இதற்கு முன்பும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்டது. மேலும் நின்று கொண்டிருந்த ஜீப்போடு சாலை போடுவது போன்ற அலட்சியமான பணிகள் நடந்து வருகின்றன.

கலை.ரா

ஹைட்ரோ கார்பன் கிணறு : ஓ.என்.ஜி.சிக்கு தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel