இரவு நேரங்களிலும் சென்னையில் வேகமாக செல்லக் கூடாது. வேக வரம்புக்குள் தான் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அனைத்து வகை வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள், குறிப்பாக ஆட்டோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
80கிமீட்டர் வரையிலாவது வேக வரம்பை நிர்ணயிக்க வேண்டும். 60கிமீ, 40கிமீ வேகத்தில் செல்லும் போது வண்டிக்கு தேய்மானம் ஆகும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மட்டும் 121 வாகனங்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 5) போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், சென்னை மட்டுமல்ல, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் வேக கட்டுப்பாடு வரம்பு குறித்து ஆய்வு செய்தோம்.
அதுபோன்று எங்களது குழுவுடன், ஐஐடி குழுவும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது.
பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த வேகக் கட்டுப்பாடு.
இரவில் சாலை காலியாக இருக்கும். அப்போது வேகமாக போகலாமா என்றால் போகக்கூடாது. வேகமாக போகும்போது வாகனத்தின் கட்டுப்பாடு நம்மிடம் இருக்காது. யாராவது குறுக்கே வந்துவிட்டால் உயிர் சேதம் ஏற்பட்டுவிடும்.
போக்குவரத்து விதிமீறலுக்காக கடந்த ஆகஸ்ட் வரை 20 சதவிகித அபராதம் தான் வசூலானது. இப்போது கால் செண்ட்டர் அமைத்தது உள்ளிட்ட காரணங்களால் 70 சதவிகிதம் வரை வசூலாகியுள்ளது.
பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆலோசனை கூட்டம் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது” என்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தொடர்ந்து நழுவும் சதம்… பிறந்தநாளில் சச்சின் சாதனையை எட்டுவாரா கோலி?