காலையில் வெறும் வயிற்றில் டீயுடன் பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது, முக்கியமாக 90s கிட்ஸ்களிடம்.
காலையில் எழுந்தவுடன் நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். முந்தைய நாள் இரவு வரை சாப்பிட்டது செரிமானத்திற்குச் சென்றுவிடும் என்பதால், வயிறு காலியாக இருக்கும்.
பிஸ்கட்டில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம். தினமும் பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஏற்படும். இது சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை நீண்ட நேரம் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதில் சோடியமும் அதிகம். நீரிழிவு மற்றும் தைராய்டு நோயாளிகள் பிஸ்கட் சாப்பிடக்கூடாது.
பிஸ்கட் மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து இல்லை. இதனால் மலச்சிக்கல் உண்டாக்கும்.
பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் என்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல் சேதமடையும். இது பற்களில் துவாரங்களை உண்டாக்கி, பற்சொத்தைக்கு வழிவகுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒன்பது மாதங்களில் 146 புலிகள் பலி: காரணம் என்ன?
இன்று முதல் குடிநீர் வரி கட்டணங்களை ரொக்கமாகச் செலுத்த முடியாது!