எம்.பி.பி.எஸ் படிக்க செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது.

இந்தநிலையில் 2022 மற்றும் 2023 ஆண்டுக்கான  எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவக்கல்லூரிகள், சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் ஆகியவற்றுக்கு நீட்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,

வரும் 22 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org, என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.  தமிழகத்தில் 10,425 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் 22 ஆம் தேதி முதல் பெறப்பட இருக்கின்றன. அதன்பிறகு மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்.

கலை.ரா

போலி பத்திரப்பதிவைத் தடுக்க புது சட்டம்: அமைச்சர் மூர்த்தி

நாளை 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *