கோடைக்கேற்ற பெஸ்ட் வெஜிடபிள் முட்டைகோஸ். சரும வறட்சியை நீக்கும், வியர்வைப் பெருக்கியாகச் செயல்படும், எலும்புகளுக்கு வலு கொடுக்கும் முட்டைகோஸில் உடலுக்குக் குளிர்ச்சித் தரும் தேங்காய்ப்பால் சேர்த்து இந்த தேங்காய்ப்பால் கோஸ் கறி செய்து கோடைக்கேற்ற உணவாக ருசிக்கலாம்.
என்ன தேவை?
சின்ன முட்டைகோஸ் – ஒன்று
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 3 பல்
தேங்காய்ப்பால் – கால் கப்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
முட்டைகோஸை மெல்லியதாக, நீள நீளமாக நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி, பிறகு கோஸை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து, மூடி போட்டு வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிக் கிளறி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்
சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!
அதிரடி.. சரவெடி… கடைசியில் பரிதாப தோல்வி : கலங்கும் ஆர்.சி.பி!