எங்கெல்லாம் பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

தமிழகம்

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் போது,கடலை ஒட்டிய கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இது மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் ஏற்கனவே விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவே சில இடங்களில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதன்படி இன்று(டிசம்பர் 9) இரவும் இரவு சேவை பேருந்துகள் இயங்காது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இரவு சேவை பேருந்துகள் 550 இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் இருந்து புதுவை மற்றும் நாகை,சிதம்பரம், வேளாங்கண்ணி,கடலூர்,மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் திண்டிவனம் சென்று அங்கிருந்து புதுவை வழியாக இயக்கப்பட உள்ளது.

மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இங்கு அதிகளவில் பாதிப்புகள் இருக்கலாம் என்று கருதி இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மற்ற வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஆம்னி பேருந்துகள் இன்று(டிசம்பர் 9)  இரவு வழக்கம் போல் இயங்கும் என்று  அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் அரசு பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த பிறகு பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *