சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியூரை சேர்ந்த பேருந்துகள், அலுவலக நேரங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் மாற்றுவழியாக பெருங்களத்தூர்- மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வந்து சேருகிறது.
இந்தநிலையில் அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த shedக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
மாலை 5மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கலை.ரா
5வது நாளாக வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
அத்துமீறிய நபரை வெளுத்து வாங்கிய ஃபிட்னஸ் மாடல்!
Sir, மாலை 5 மணி மேல் வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரத்தில் பயணிகளை இறக்கிவிட்டு byepass வழியாக மதுரவாயல் சென்றால் நன்று- தயவுசெய்து பரிசீலித்து நடைமுறைப்படுத்தவும் – நன்றி