தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப் பேருந்து!

தமிழகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இன்று (செப்டம்பர் 25) அரசு பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் நெடிமோழியனூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆலகிராமம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மயிலம் போலீஸ் மற்றும் திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய பேருந்திலிருந்த பயணிகளை அருகிலிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் லேசான காயம் ஏற்பட்ட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோனிஷா

”உதயகுமார் எப்படி அமைச்சராக இருந்தார்?” பிடிஆர் காட்டம்!

சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’: ஓடிடி விற்பனையில் சாதனை!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *