தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பைக் காட்டிலும் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
அதன்படி, கரூர், பரமத்தியில் 102.2, சேலம் 101.84, ஈரோடு.101.48, வேலூர் 100.76, நாமக்கல் 100.4, மதுரை நகரம் 100.04, மதுரை விமான நிலையம் 100.04, திருப்பத்தூர் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.
அதில் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 12, 13 தேதிகளில் இயல்பை விட கூடுதலாக 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
பிரியா
கல்லால் பல்லை உடைத்தார்: பல்வீர் சிங் மீது இன்னொரு புகார்!
திமுக கவுன்சிலரை காப்பாற்ற முயற்சி : ஈபிஎஸ் குற்றச்சாட்டு!