விடுமுறை நாட்களில் வித்தியாசமாக சுவைக்க வேண்டும் நினைப்பவர்கள் அநேகர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற சத்தான புரொக்கோலியுடன் சுவையான மசாலா பொருட்களைச் சேர்த்து செய்யப்பட்ட இந்த புரொக்கோலி ஃபிரிட்டர்ஸ் உதவும். சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி சுவைக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் அமையும்.
என்ன தேவை?
நறுக்கிய புரொக்கோலி – 100 கிராம்
மைதா மாவு – 50 கிராம்
முட்டை – 2
வெண்ணெய் – 10 கிராம்
இடித்த பூண்டு – 3 பல்
மிளகுத்தூள், உப்பு – தலா 5 கிராம்
தூளாக்கிய சிவப்பு மிளகாய் – 5 கிராம்
வெஜிடபிள் ஆயில்- 100 மில்லி
சின்ன வெள்ளரி – 1
உருளைக்கிழங்கு- 50 கிராம்
எப்படிச் செய்வது?
வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் இவற்றுடன் சேர்த்துக் கிளறி, அரைத்துக் கொள்ளவும். அதை எண்ணெயைச் சூடாக்கிப் பொரித்து எடுக்கவும். இதை பொரிப்பதற்கு 7 நிமிடம் போதும்.