செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் இன்று (ஜூலை 4) தீர்ப்பளித்துள்ளனர்.
இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை அளித்துள்ளதால் இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது.
நீதிபதி நிஷா பானு தீர்ப்பு
இந்த ஹேபியஸ் கார்பஸ் மனு நிலைக்கத்தக்கது. அமலாக்கத்துறைக்கு போலீஸ் கஸ்டடி எடுக்கவே அதிகாரம் இல்லை. எனவே அவருக்கு போலீஸ் காவல் கொடுக்கவே முடியாது. எனவே செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியே எழவில்லை. செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் சட்ட விதி மீறல்கள் இருக்கிறது. எனவே அவர் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு
ஹேபியஸ் கார்பஸ் மனு இந்த வழக்கு சூழலில் ஏற்கத்தக்கதல்ல. அவரை கஸ்டடி எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்த முதல் 15 நாட்களை கழித்துக் கொள்ள வேண்டும். அவர் மேலும் பத்து நாட்களுக்கு காவேரி மருத்துவமனையில் தொடரலாம். உடல் நிலை சீரான பிறகு சிறையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். உடல்நிலை முற்றிலும் சரியான பிறகு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். செந்தில்பாலாஜியின் கைது சட்ட விரோதம் என்று சொல்வதற்கில்லை.
தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் இரு நீதிபதிகள் தீர்ப்பின் முழு விவரங்களையும் வாசகர்களுக்கு தருகிறோம்.
–வேந்தன்
குற்றவியல் சட்டம் அமலாக்கத் துறைக்கும் பொருந்தும்: நீதிபதி நிஷா பானு
செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: அடுத்து என்ன?