நொறுக்கு தீனி பிரியர்களின் லிஸ்ட்டில் முக்கிய இடம்பிடிப்பது ரோல் அயிட்டங்கள். இவர்கள் கடையில் விற்கப்படும் ரோல் வகைகளைத் தவிர்த்து வீட்டிலேயே இந்த பிரெட் பனீர் ரோல் செய்து சுவைக்கலாம். இதில் கொழுப்பு, புரதம், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. உடனடி சக்தி கிடைக்க உதவும்.
என்ன தேவை?
பிரெட் – 4 ஸ்லைஸ்
பனீர் – 100 கிராம்
சீஸ் – சின்னதாக ஒரு சதுர வில்லை
பச்சை மிளகாய் – ஒன்று
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
உலர் திராட்சை – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – டோஸ்ட் செய்ய தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பனீர், சீஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும். ஒரு பிரெட்டில் வெண்ணெய் தடவி, பனீர் கலவையை வைத்து, இன்னொரு பிரெட்டால் மூடி, தோசை தவாவில் போட்டு, நன்கு டோஸ்ட் செய்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சப்ஜி