காலையில் அவசரமாகச் சாப்பிட்டு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள் பிரெட். அந்த பிரெட்டில் சுவையான பிரெட் சீஸ் பைட்ஸ் செய்து சுவைத்து இந்த நாளை சிறப்பாக்கலாம்.
என்ன தேவை?
பிரெட் ஸ்லைஸ் – 4
சீஸ் ஸ்லைஸ் – 2
கார்ன்ஃப்ளார் – 6 டீஸ்பூன்
பிரெட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
2 பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவில் ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து அதை ப்ளஸ் (+) வடிவத்தில் வெட்டி நான்கு துண்டுகளாக்கவும். கார்ன்ஃப்ளாரைத் தண்ணீர் சேர்த்துக் கரைத்துவைக்கவும். பிரெட் துண்டுகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கியெடுக்கவும். அவற்றை உடனே பிரெட் தூளில் புரட்டியெடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு பிரெட் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் வடை
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கொழுக்கட்டை