நிதியமைச்சர் பேசும்போதே வெளியேறிய பெண்கள்: கதவைப்பூட்டி தடுத்த பவுன்சர்கள்!

அரசியல் தமிழகம்

புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பாதியிலேயே பொதுமக்கள் வெளியேறினர். இதனையடுத்து கதவை பூட்டி பவுன்சர்களை மூலம் அவர்களை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் வங்கிப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி,  அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவிற்காக புதுச்சேரி முழுவதும் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலை திட்ட பணிகளை ரத்து செய்து, அதில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட பெண்களை பேருந்து மூலம் விழா நடைபெற்ற மைதானத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

மேலும் அவர்கள் கலைந்து செல்லக்கூடாது என்பதற்காக பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பந்தலில் அமரவைக்கப்பட்டு மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் விழா தொடங்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த பெண்கள், முதியோர்  விழா  தொடங்கி நிர்மலா சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டம் கூட்டமாக விழா அங்கிருந்து வெளியேறினர்.

இதனைக்கண்டு பதற்றமடைந்த அதிகாரிகள், கதவை மூடியதோடு, பவுன்சர்களை வைத்து வெளியே செல்ல முற்பட்ட பெண்களை தடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெண்கள், அதிகாரிகள் மற்றும் பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அரசு அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

மெட்ரோவால் தாமதம் ஆகும் உயர்மட்ட பால பணிகள்: எ.வ.வேலு 

தெலங்கானா மக்களுக்கு ஆபத்து: பிரதமர் மோடி 

+1
0
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *