கோடையில் வாரத்துக்கு ஒருநாள் எல்லோர் வீட்டிலும் எளிதாகச் செய்யக்கூடிய, தொந்தரவு இல்லாத மோர்க்குழம்பு இடம்பெற்றுவிடும். பெரும்பாலும் கத்திரிக்காய் சேர்த்தே மோர்க்குழம்பு வைப்பார்கள்.
இந்த நிலையில் உடலுக்குக் குளிர்ச்சி தரும் நீர்க்காயான சுரைக்காய் சேர்த்து சுவையான இந்த மோர்க்குழம்பு செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து வைக்கலாம். கோடையைக் குளிர்ச்சியாக்கலாம்.
என்ன தேவை?
தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய சுரைக்காய் – கால் கப் (வேகவைக்கவும்)
கெட்டித்தயிர் – ஒரு கப் (கடையவும்)
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்தெடுக்கவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
குஜராத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!