போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பழைய பொருட்களை எரித்ததன் காரணமாகக் காற்று மாசு மோசமடைந்துள்ளது.
தை திருநாளாம் பொங்கலை வரவேற்கும் பொருட்டு இன்று காலை போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர்.
இதன் விளைவாக பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாகச் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
AQI எனப்படும் காற்றின் தரம் 51-100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. இதுவும் வேறேனும் உடல்நல பாதிப்பு இருப்பவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் போகி கொண்டாட்டம் காரணமாகச் சென்னையில் அதிகபட்சமாகக் காலை 6 மணி நிலவரப்படி ஆலந்தூர் 155, பெருங்குடி 113, கொடுங்கையூர் 94 , மணலி 87, அரும்பாக்கம் 86, வேளச்சேரி 84, ராயபுரம் 82 என காற்றின் தரம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு காரணமாக இன்று வாகன ஓட்டிகள் சிகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கியதைக் காண முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
களத்தில் சந்திப்போம் : காயத்ரி ரகுராம் அதிரடி!