வீக் எண்டை எப்படிக் கொண்டாடலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் சுவையான இந்த பாம்பே கார டோஸ்ட். முட்டையில் புரதம் அதிக அளவில் உள்ளதால் நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும். முட்டையில் பால், சர்க்கரை கலந்து அடித்து, அந்தக் கலவையில் பிரெட்டை நனைத்து, டோஸ்ட் செய்தால், ‘பாம்பே ஸ்வீட் டோஸ்ட்’ கிடைக்கும்.
என்ன தேவை?
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 1 (அளவில் சிறியது)
பூண்டு – 5
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
பிரெட், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, மிளகாய்த் தூள் மூன்றையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து, நன்கு அடித்துக்கொள்ளவும். பிரெட்டை, முட்டைக் கலவையில் நனைத்து, தோசை தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பாம்பே கார டோஸ்ட் ரெடி.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!