போலி பத்திரப்பதிவைத் தடுக்க புது சட்டம்: அமைச்சர் மூர்த்தி
“மோசடி ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை வரும் செப்டம்பர் 28ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது” என வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 20) திடீரென வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மோசடி ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை திட்டம் வரும் செப்டம்பர் 28ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. அதை தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்த இருக்கிறார்.
இதன்மூலம், நிலங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டால், அதை ரத்து செய்வதோடு அந்த நில உரிமைதாரருக்கே சொத்து ஒப்படைக்கப்படும். இந்தப் பதிவுச் சட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
இதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உரிய சிறைத்தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
மேலும், அந்தச் சட்டத்தின் மூலம் காலதாமதமின்றி உடனே தீர்வும் காணப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஸ்டாலினிடம் தேம்பித் தேம்பி அழுத மாவட்டச் செயலாளர்
நாளை 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்