போகி பண்டிகை : மேளம் அடித்து கொண்டாட்டம்!

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்கழி கடைசித் தேதியான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டியை முன்னிட்டு வீடுகளைச் சுத்தம் செய்து சேகரித்து வைத்திருந்த குப்பைகளை எரித்து இன்று அதிகாலை தமிழ்நாடு மக்கள் பொங்கலை வரவேற்றனர்.

சென்னை மயிலாப்பூரில் பழைய பொருட்களை எரித்து, மேளம் அடித்து பொங்கலை வரவேற்று சிறுவர்கள் கொண்டாடினர். அதுபோன்று பல்வேறு இடங்களிலும் போகியை முன்னிட்டு குப்பைகள் எரிக்கப்பட்டதால் சென்னை புகை மூட்டம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை ஓட்டுகின்றனர்.


விழுப்புரம் நகரில் உள்ள தெருக்களில் மக்கள் குப்பைகளை எரித்து போகியை கொண்டாடினர்.

ஏற்கனவே பனிமூட்டம் நிலவும் நிலையில், புகையும் சேர்ந்து விழுப்புரம் நகரம் முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.

காஞ்சிபுரம் நகர மக்கள் அதிகாலைலேயே குடும்பத்துடன் எழுந்து, மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி,புதிய நல்லெண்ணங்களை வரவேற்கும் விதமாகப் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுபோன்று திருவள்ளூர், வேலூர், சேலம் என அனைத்து இடங்களிலும் போகியை கொண்டாடி மக்கள் பொங்கலை வரவேற்றனர்.

முன்னதாக, சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

வேலைவாய்ப்பு : கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts