கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

உட்கார்ந்த நிலையில் பணியாற்றுபவர்களுக்கும், நாற்பது வயதை கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. அப்படிப்பட்ட ஊட்டச்சத்துகள் கறுப்பு உளுந்தில் அதிக அளவில் உள்ளன. கறுப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.

அப்படிப்பட்ட கறுப்பு உளுந்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த உருண்டை செய்து வீட்டிலுள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.

என்ன தேவை?

கறுப்பு உளுந்து – ஒரு கப்
கருப்பட்டி – 50 கிராம்
தேங்காய்த் துருவல் – கால் கப்

எப்படிச் செய்வது?

உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து குக்கரில் சேர்த்து வேகவைக்கவும். வெந்த உளுந்தை வடிகட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதில் கருப்பட்டி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைக்கவும். பின்னர் இதை உருண்டையாகப் பிடித்து வைத்து பரிமாறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

கிச்சன் கீர்த்தனா: கடற்பாசி ஸ்வீட்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts