'Black sea' warning in 4 seas in Tamil Nadu!

தமிழகத்தில் உள்ள 4 கடல்களில் ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

தமிழகம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள 4 கடற்கரைகளுக்கு கடல் சீற்றத்திற்கான எச்சரிக்கை இன்று (ஜூன் 10) விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்கடல் எச்சரிக்கை

அமைதியாக காணப்படும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு “கள்ளக்கடல்” நிகழ்வு எனப்படும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில கடல்களில் கடல் சீற்றத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு கடல் சீற்றத்திற்கான எச்சரிக்கை அதாவது கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கடல் இன்று (ஜூன் 10) சீற்றத்துடன் காணப்படும்.

மேலும், கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 – 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 – 3 மீட்டர் வரையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடியை பொறுத்தவரை 2.4 – 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை (ஜூன் 11) இரவு 11.30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையம் அறிக்கை

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூன் 16ஆம் தேதி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று (ஜூன் 10) மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

இன்று (ஜூன் 6) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 35 -45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது’ : பன்னீர் ஆதங்கம்!

கோவை: தாயை பிரிந்த குட்டியானை முதுமலை முகாமில் சேர்ப்பு!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *