மதுரையில் 144 தடையை மீறி, திருப்பரங்குன்றத்தில் இன்று (பிப்ரவரி 4) போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். bjp protest at thiruparangundram
ஆனால் பக்தர்கள் என்று போலீசாரை ஏமாற்றி, திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிய பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலகு குத்தியபடி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று கூறி இன்று காலை போலீசாரிடம் சிலர் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு போலீசாரும் அனுமதி வழங்கினர்.
ஆனால் நேர்த்திக்கடன் செலுத்த சென்ற சிலர், பாஜக கொடியுடன் மலைக்கோவிலில் போலீஸுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதே போன்று பக்தர்களாக வந்த 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மகளிர் அமைப்பினரும், கோவிலுக்கு பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.