Bird Survey in Tamil Nadu 2024 Surprising Information

தமிழகத்தில் பறவைகளின் எண்ணிக்கை: ஆச்சரியத் தகவல்!

தமிழகம்

வனத்துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. Bird Survey in Tamil Nadu

இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும். அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வனத்துறையால் நடத்தப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும்.

அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் ஆகும். மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028 இல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 69,913 நீர்வாத்துகள், 28,822 பூநாரைகள், 6,789 முக்குளிப்பான்கள், 19,919 கடற்கரை பறவைகள், 1.73,294 கடற்புறா, ஆலா வகைகள், 17,865 பெருங்கொக்குகள், 54,008 பாம்பு தாரா மற்றும் நீர்க் காகங்கள், 1,65,635 கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள் என மொத்தம் 5,36,245 நீர் பறவைகள் நேரடியாக கணக்கிடப்பட்டுள்ளன.

6,450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 3,350 பணியாளர்கள் என மொத்தம் 9,800 நபர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் Bird Survey in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

முடிவுக்கு வந்த 12 வருட பந்தம்… காதல் கணவரை பிரிந்த நடிகை இஷா தியோல்

Propose Day 2024 : தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் வசனங்கள்!

நான் அடிச்சா தாங்கமாட்டே… அப்டேட் குமாரு

ரூ.8.65 லட்சம் கோடி முதலீடு… 30 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *