திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன.
இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, பின்னர் அந்த கழிவுகளை கேரள அரசே தங்கள் மாநிலத்துக்கு அள்ளிச் சென்றது. தற்போது, தமிழகத்தில் கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டிய நிறுவனம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனேஜ் ஈகோசிஸ்டம் என்ற தனியார் நிறுவனம்தான் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம்தான் தொடர்ச்சியாக தமிழகத்தில் குப்பைகளை ஏற்றி வந்து கொட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளது.
தமிழகத்தில் குப்பைகளை கொட்டியது குறித்து கேரள அரசு, இந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், அந்த நிறுவனம் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை கேரள அரசு ரத்து செய்துள்ளது.
அதோடு, 3 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மேலாண்மை, மருத்துவக்கழிவுகள் அகற்றுதல் , திடக்கழிவுகள் அகற்றுதல் என அனைத்து பிரிவுகளிலுமே விதிமுறையை மீறி செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அப்போது ‘சிங்கம் அண்ணா’ செய்த காரியம்!
பாலியல் வன்கொடுமை… எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேரிடம் விசாரணை… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு