திருச்சி – சிதம்பரம் சாலையில் பைக்கில் வீலிங் செய்தபடி பட்டாசு வெடித்த விவகாரத்தில் காவல்துறையினர் இன்று (நவம்பர் 13) ஒருவரை கைது செய்துள்ளனர்.
வித்தியாசமான முறையில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது பைக்கில் வானில் வெடிக்கும் பட்டாசுகளை கட்டி வீலிங் செய்தபடி பட்டாசு வெடிக்கும் வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருச்சி – சிதம்பரம் சாலையில் வான வெடியை பைக்கின் முகப்பில் கட்டி வீலிங் செய்தபடியே பட்டாசு வெடித்த வீடியோ இணையத்தில் வைரலானது. பார்க்கவே நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சாசகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டறிந்து காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில் திருச்சி மாநகர போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. வீலிங் சாகச பயணத்தை வீடியோ எடுத்த திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்யை திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் இன்று கைது செய்தனர். தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டாசு விதிமீறல்: 2,246 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?