குறுகிய தூரம் இயக்கப்படும் சாதாரண பாசஞ்சர் ரயிலின் கட்டணம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மெமு , பாசஞ்சர் ரயில்களில் இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இதை உடனடியாக அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குறுகிய தூர பாசஞ்சர் ரயில்களில் சாதாரண கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த வகை ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 30 -ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு மெமு விரைவு சிறப்பு ரயிலில், முன்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.70 ஆக இருந்தது. தற்போது இந்த ரயிலில் கட்டணம் ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், ”ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 200 கி.மீ தூரம் வரை இயக்கப்படும் குறுகிய தூர ரயில்களில் சாதாரண கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும்,” என்று தெரிவித்தனர்.
பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைந்திருப்பது பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடி-யில் வெளியாகும் ‘ப்ளூ ஸ்டார்’ வெளியீட்டு தேதி இதுதான்!
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு நிதி கேட்டு ஸ்டிக்கர்!
எலக்சன் வருதுல்ல..,