தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் விருதுகள் என்ற பெயரில் வழங்கப்படும்.
அந்த வகையில் 2022-23-ம் வருடத்திற்கான சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக, சேலம் மாவட்டத்திற்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்படுகிறது. இதற்கான பரிசு தொகை ரூ.25 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, நகராட்சிகளில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி முதலாவது இடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளன. இந்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் சுதந்தர தின விழாவின் போது வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
பணம் வளர்ப்பா…? குழந்தை வளர்ப்பா..?