பெங்களூரு மோதல்: விஜய் சேதுபதி மேல்முறையீடு!

தமிழகம்

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த ஆண்டு (2021) நவம்பர் 3ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் தனது உதவியாளர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாவலர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர், அவர் பின்னால் சென்று தாக்குதல் நடத்திய வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் விசாரணையில் விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட நபர் மகாகாந்தி என்பது தெரியவந்தது. நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக தாம் அங்கு சந்தித்தபோது, அவரின் சாதனைகளைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக மகாகாந்தி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அவர் தொடர்ந்த மனுவில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ”பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது தவறானது. சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது” என விஜய் சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.

Appeal by actor Vijay Sethupathi

மேலும் விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் விஜய் சேதுபதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் அவர் மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க  மறுப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் தன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி விஜய் சேதுபதி இன்று (செப்டம்பர் 23) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருக்கும் அவதூறு வழக்கை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

கலை.ரா

ஆர்.எஸ்.எஸ். பேரணி: ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *