அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 6) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.
பின்னர் மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி அன்று காலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும்.
இதையடுத்து இன்றுமுதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
இந்த நிலையில், அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
வங்கக்கடலில் புயல்: தயார் நிலையில் மீட்புப் படையினர்!
ஃபிஃபா கால்பந்து: தென் கொரியாவை பந்தாடிய பிரேசில்