Beetroot Soup Recipe in Tamil Kitchen Keerthana

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்

தமிழகம்

பீட்ரூட்டைப் பார்த்தாலே ஓடி விடுகின்றனர் இன்றைய தலையினர். அதற்காக சத்துகள் நிறைந்த பீட்ரூட்டைச் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. அதனால் அனைவருக்கும் பிடித்தமான வகையில் பீட்ரூட்டை சூப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சூப், ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும். ரத்தச் சோகை வராமல் தடுக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும். செரிமானத்துக்கும் உதவும்.

என்ன தேவை?

சிறிய பீட்ரூட் – ஒன்று
துவரம்பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 2 சிட்டிகை
கல்பாசி – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீட்ரூட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் தனித்தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு சூடாக்கி, சோம்பு, கல்பாசி தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பீட்ரூட்டை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும், துவரம்பருப்பு வேகவைத்த நீர் ஊற்றவும். அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கிச்சன் கீர்த்தனா: அத்திப்பழ கீர்

கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் பொடிமாஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0