beetroot murma recipe in tamil

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் குருமா

தமிழகம்

பொதுவாக இனிப்புகளை விரும்பி சாப்பிடும் சிலருக்கு பீட்ரூட் பிடிக்காமல் இருக்கிறது. ஆனால், நம் உடலுக்கு பீட்ரூட் தரும் நன்மைகள் அளவிட முடியாதது. செரிமான அமைப்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பீட்ரூட்டில் குருமா செய்து அசத்துங்கள். பீட்ரூட்டை வெறுப்பவர்கள்கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

என்ன தேவை?

பெரிய பீட்ரூட் – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பெரிய தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – ஒன்று
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டீஸ்பூன்

கொரகொரப்பாக அரைக்க…

இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள் – 10

விழுதாக அரைக்க…

துருவிய தேங்காய் – 5 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்

தாளிக்க…

பட்டை – ஒரு துண்டு
பிரிஞ்சி இலை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி, வேக வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து ஆறியதும், தோல் நீக்கி மசிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து பொன்னிறமாக தாளிக்கவும்.

இதில் கொரகொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயம், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.

இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். வெந்த பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, மூன்று நிமிடம் நன்கு வதக்கிக் கொதிக்க விடவும். இதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

கிச்சன் கீர்த்தனா: மேத்தி சன்னா பனீர்

கிச்சன் கீர்த்தனா: கடாய் சோயா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *