கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் இடியாப்பம்

தமிழகம்

பீட்ரூட்டில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. ரத்த உற்பத்திக்கும் சருமப் பாதுகாப்புக்கும் உதவும் இந்த பீட்ரூட் இடியாப்பம் அனைவருக்கும் ஏற்றது. இதில் சேர்க்கப்படும் இஞ்சி – பூண்டு விழுது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும்.

என்ன தேவை?

இடியாப்பம் – ஒரு கப்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

கொண்டைக்கடலை – ஒரு டீஸ்பூன்

பீட்ரூட் விழுது – 3 டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை

உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, இஞ்சி – பூண்டு விழுது, பீட்ரூட் விழுது, உளுத்தம்பருப்பு, கொண்டைக் கடலை, கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும் இடியாப்பத்தைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

அரிசி – பருப்பு சாதம்

தக்காளி அடை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *