சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டும் வெடித்தும் காணப்படும். குறிப்பாக, குளிர் காலத்தில் உதடுகள் வெடித்து ரத்தமே வருவதுண்டு. அதை மறைக்க லிப்ஸ்டிக் பயன்படுத்துவார்கள். உதடுகள் கருத்துப் போவதையும் வறண்டு போவதையும் தடுக்க தீர்வு என்ன? அழகுக்கலை நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இதோ…
“வறண்டு, கருத்துப் போகும் உதடுகள் பிரச்சினைக்கு லிப்ஸ்டிக் பயன்பாடுகூட காரணமாக இருக்கலாம். குறிப்பாக, டார்க் ரெட், டார்க் வயலட் நிற ஷேடுகளில் லிப்ஸ்டிக் உபயோகிப்பவர்களுக்கு, அதிலுள்ள நிறமியின் காரணமாக, உதடுகள் வறண்டும், கருத்தும் போகலாம். ஒரு கட்டத்தில் லிப்ஸ்டிக் இல்லாமல் இருக்கவே முடியாத நிலை ஏற்படும்.
எனவே, லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன், `லிப் பிரைமர்’ அல்லது `லிப் சன் ஸ்கிரீன்’ பயன்படுத்திவிட்டு, அதன் மேல் லிப்ஸ்டிக் போடலாம். மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். ஆனால், அவை உதடுகளை சீக்கிரமே வறண்டும், கருத்தும் போகச் செய்யும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
வாசலைன் தடவுவது உதடுகளின் வறட்சியை நீக்கும். ஆனால், அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, தரமான லிப் பாம் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். வைட்டமின் ஈ ஆயில் உள்ள லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.
உதடுகளின் வறட்சி நீங்க செக்கில் ஆட்டிய, கலப்படமற்ற தேங்காய் எண்ணெய் தடவுவதும் நல்ல பலன் தரும். உதடுகள் வறண்டுபோவதால் நாக்கினால் ஈரப்படுத்தவே கூடாது. அது வறட்சியை மேலும் அதிகமாக்கும். உதடுகளில் தோல் உரிந்து வந்தால் கடிக்கவோ, பிய்த்து எடுக்கவோ கூடாது” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஒரு வேளைக்கு எந்த அளவு காய்கறிகள் சாப்பிட வேண்டும்?
டாப் 10 நியூஸ்: திமுக எம்.பி-க்கள் கூட்டம் முதல் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை!