சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சார ரயில் வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (நவம்பர் 17) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: முதல்வர் வீடு சூறை… மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்!
விருதுநகர்: பசியோடு வீட்டுக்குள் நுழைந்த பெரியவரை கம்பத்தில் கட்டிவைத்த அவலம்!