பொங்கலுக்கு முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதமே புத்தக திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி சங்கத்தினர் இன்று (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடையமையாக்கியதற்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பபாசி சங்கத்தினர் இன்று நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பபாசி சங்கத்தினர்,
“கலைஞரின் புத்தகங்களை நாட்டுடமையாக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், பதிப்பாளர்கள் சந்திக்கின்ற சிரமங்கள் தொடர்பாக கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். முதல்வர் அதை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்.
கொரோனாவுக்கு முன்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சென்னைக்கு வந்து மார்கழி திருவிழா பார்த்துவிட்டு புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி சென்றனர்.
கொரோனாவுக்குப் பிறகு தமிழர்கள் இங்கு வருவதில் சில பிரச்சனைகள் இருந்தது. பின்னர் ஜனவரியில் புத்தக திருவிழாவை நடத்தியபோது, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
அதனால், செயற்குழு, பொதுக்குழுவில் கலந்தாலோசித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதமே புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பெருமழையின் போது ஒருநாள் புத்தக கண்காட்சியை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை ஒட்டி புத்தக திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் போலீசாருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
உக்ரைனில் மோடி: ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை… ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சீக்கிரமே தேதிகளை அறிவிச்சா வெளியூரு ஆளுங்க டிக்கட் ரிசர்வ் பண்றதுக்கு வசதியா இருக்கும்ல