நள்ளிரவில் நிறுத்தப்பட்ட ரயில்

தமிழகம்

பெங்களூரு விரைவு ரயில் ஏசி பழுது காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று (நவம்பர் 25) இரவு ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 10.50 மணிக்கு பெங்களூரு விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் முதல் வகுப்பில் இரண்டு பெட்டிகளில் ஏசி பழுதானதால், பயணிகளுக்கும் ரயில் டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரித்ததால், பெங்களூரு விரைவு ரயில் இரவு 11.55 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகள் ரயில் ஊழியர்களிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏசி மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, ரயிலில் ஏசி பழுது சரி செய்யப்பட்டது.

அதன்பிறகே பயணிகள் சமாதானமடைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நள்ளிரவு 1.05 மணியளவில் பெங்களூரு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

ஏசி பழுது காரணமாக பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்வம்

கால்பந்து உலகக்கோப்பை: டிராவில் முடிந்த விறுவிறு போட்டி!

பொதுவெளியில் முத்தம்: ஸ்ரேயா பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0