பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (மார்ச் 27) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ஷபீர் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சென்னையில் தங்கியிருந்ததாக என்ஐஏ அதிகரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் வசிக்கும் அப்துல்லா, முத்தியால்பேட்டை தெருவில் வசிக்கும் சையது அபுதாஹிர் வீடு உள்பட மூன்று இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், என்ஐஏ சோதனை நடைபெறுவது அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ‘ரெட்டினால் ஆன்ட்டி ஏஜிங் க்ரீம்’… எல்லோருக்கும் ஏற்றதா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!