கத்தரி வெயில் வாட்டியெடுக்கும் காலகட்டம் இது. வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது போர்க்களத்திலிருந்து பாசறை திரும்பிய உணர்வு. அப்போதும் வெயிலின் தாக்கம் ஒரேயடியாகத் தணிந்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் குளிர்ந்த நீர், ஜூஸ் அருந்துவதைவிட, இந்த வாழைத்தண்டுப் பச்சடி சாப்பிடலாம்.
என்ன தேவை?
நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்
சின்ன வெங்காயத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை விழுது – ஒரு டீஸ்பூன்
தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.