கிச்சன் கீர்த்தனா:பனானா பான் கேக்!

தமிழகம்

‘நல்லாதான் சாப்பிட கொடுக்கிறோம்… ஆனால், நம்ம குழந்தை புஷ்டியா இல்லையே’ எனச் சொல்லிக்கொள்பவர்கள் பலருண்டு.  இதில் எவ்வளவு சாப்பிட வைக்கிறீர்கள் என்பதை விடவும் எதைச் சாப்பிடக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு இந்த பனானா பாக் செய்து கொடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கொழுகொழு குழந்தையாக்கலாம்.

என்ன தேவை?

கோதுமை மாவு – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
விருப்பமான வாழைப்பழம் – 2 (பழம் பெரிதாக இருந்தால் ஒன்று போதும்)
உப்பு – ஒரு சிட்டிகை
சாக்கோ சிப்ஸ்/டிரை ஃப்ரூட்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெல்லத்தைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மிக்ஸியில் வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைத்து வைக்கவும். ஒரு சிட்டிகை வெல்லப்பாகில் சிறிது உப்பு, வாழைப்பழ விழுதைச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து தோசைமாவு பதத்துக்குக் கிளறவும்.

தோசைக்கல்லில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு, உள்ளங்கை அளவில் மாவெடுத்து கல்லில் சின்னதாக ஊற்றி, இருபுறமும் நன்கு வேக வைக்கவும். இதைச் சுற்றி எண்ணெய் விட்டும் வேக வைக்கலாம். வெந்ததும் பான் கேக்கை எடுத்து தட்டில் வைத்து சாக்கோ சிப்ஸால் அலங்கரித்துப் பரிமாறவும்.

பான் கேக்கின் சூட்டில் அதன் மேலே வைத்த சாக்கோ சிப்ஸ் உருக ஆரம்பிக்கும். டிரை ஃப்ரூட்ஸ் சேர்ப்பதாக இருந்தால், மாவில் கலந்து அப்படியே பான் கேக்காக வார்த்தெடுக்கவும்.

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செஷ்வான் சில்லி பொட்டேட்டோ

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *