உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்த வாழைப்பூ சீரகக் கஞ்சி குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு. நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும் இந்தக் கஞ்சி அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வாழைப்பூ இதழ் – 15
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சீரகச்சம்பா அரிசி – கால் கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை – சிறிது
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வாழைப்பூவை காம்பு நீக்கி, நறுக்கி மோரில் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், இஞ்சித் துருவல், வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி, அரிசி, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சுக்கு சூப்
சண்டே ஸ்பெஷல்: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அடையாளம் காண்பது எப்படி?